பாய் பிரண்டை கழட்டிவிட்டு 3வது முறையாக காதலில் விழுந்த வாரிசு நடிகை.. அதுவும் பிளேபாய் நடிகருடன்!

பாய் பிரண்டை கழட்டிவிட்டு 3வது முறையாக காதலில் விழுந்த வாரிசு நடிகை.. அதுவும் பிளேபாய் நடிகருடன்!

பிரபல நடிகரின் மகள் ஏற்கனவே காதலித்து வந்த இரண்டு பேரை கழட்டி விட்டுவிட்டு தற்போது மூன்றாவது முறையாக பிளேபாய் நடிகருடன் காதலை வளர்த்து வருவது சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்களை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கே உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் அந்த நடிகர். அவரது மகள் சமீப காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது கூட நடிப்பு அசுரனுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் அக்கட தேசத்தில் ப்ளேபாய் நடிகராக வலம் வருபவருடன் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆரம்பத்தில் தான் உண்டு தன் படப்பிடிப்பு உண்டு என்று என இருந்த அந்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகரிடம் உங்கள் ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டாராம். சில நாட்கள் அவருடன் பழகி பார்த்தவுடன் நம்முடைய அடுத்த காதலர் இவர்தான் என முடிவு செய்து கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பித்தாராம்.

செல்பியில் ஆரம்பித்த அந்த பழக்கம் அடுத்து இருவரும் சாப்பாடு ஊட்டிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி விட்டதாம். அதனைத் தொடர்ந்து அந்த நடிகை சமீபத்தில் அந்த நடிகரின் மேல் படுத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்டதற்கு அந்த நடிகரின் தீவிர ரசிகை நான் என பதில் கூறியிருந்தார் அந்த நடிகை. ஆனால் அந்த புகைப்படமே எக்குதப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகரும் சும்மா சொல்லக்கூடாது. அக்கட தேசத்தில் பிளேபாய் நடிகர்தான். தற்போது மேற்கே செல்ல ஆசைப்பட்டு அங்கே உள்ள வாரிசு நடிகையை உஷார் செய்துள்ள விஷயம் அவருடைய பழைய காதலிகளை கோபப்படுத்தி உள்ளதாம்.

அதேபோல் அந்த நடிகையும் பச்ச புள்ள கிடையாது. ஏற்கனவே மேற்கத்திய நடிகர்கள் 2 பேரை காதலித்து சமீபத்தில் தான் ஒருவரை பிரேக்கப் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேட்டால் சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா என காதல் என்ற பெயரில் தங்களுடைய காம வேட்டையை தொடர ஆரம்பித்து விடுகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES