கர்ணன் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்.. விண்ணைத்தொடும் தனுஷ் மார்க்கெட்

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்.. விண்ணைத்தொடும் தனுஷ் மார்க்கெட்

தற்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. இதற்கு காரணம் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் என பல உண்டு.

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் எந்த தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை சரியான விதத்தில் எடுத்து செல்கிறார்களோ அந்த படங்களுக்கு கூட்டம் கூடுவது எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த யுத்தியை கையாளும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் தான் கலைப்புலி எஸ் தாணு.

இவரது தயாரிப்பில் தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கர்ணன்’. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக பிசினஸ் செய்திருக்கிறார் என்று டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஏனென்றால் இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘பட்டாசு’ ஆகிய படங்களின்  தியேட்டரிகள்  ரவன்யூவின் அடிப்படையில் பார்த்தால் ‘கர்ணன்’ படத்தை 12 முதல் 15 கோடிக்கு தான் விற்க முடியும். ஆனால் தாணு போட்ட பக்கா பிளான் மூலம் இந்த படம் 26 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளது.

அது எவ்வாறென்றால், கலைப்புலி எஸ் தாணு விநியோகஸ்தர்களிடம்  இந்த இரண்டு படங்களை தவிர்த்து, தனது தயாரிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் வசூல் சாதனையை எடுத்துக்காட்டி, கர்ணன் படத்தை பிசினஸ் செய்தாராம்.  ஏனென்றால் அசுரன் படம் ஏறக்குறைய ஐந்து வாரங்கள் ஓடி வெற்றிப்படமானதோடு, ஏறக்குறைய தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ஷேர் கொடுத்ததாம். இதைக் காரணம் காட்டி தான் தாணு கர்ணன் படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்துள்ளாராம்.

 

மேலும் அசுரன் படத்தில் தாணு சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் சொந்தமாக ரிலீஸ் செய்து 10 கோடி லாபம் பெற்றதாலோ என்னவோ தற்போது தமிழகம் முழுவதும் ‘கர்ணன்’ படத்தை விநியோகஸ்தர்களிடம் இருந்து அட்வான்ஸ் மட்டும் பெற்றுக்கொண்டு சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்து விட்டாராம்.

அதனடிப்படையில் கர்ணன் படத்தின்  தமிழ்நாடு தியேட்டரிகல் பிஸ்னஸ்  இதோ:

  1. சிட்டி ( பிவிஆர் சினிமா)- 3 கோடி
  2. செங்கல்பட்டு ( மால் தியேட்டர் பிவிஆர், சிங்கிள் தியேட்டர்ஸ் அருள்பதி)- 6 கோடி
  3. வட ஆற்காடு (கேலக்ஸி பிக்சர்ஸ் வேலூர்)- 1.60 கோடி
  4. தென் ஆர்க்காடு (5 ஸ்டார் செந்தில்)- 1.80 கோடி
  5. கோவை (ராஜமன்னார்)- 4.50 கோடி
  6. திருச்சி (ராக்போர்ட் முருகானந்தம்)- 3 கோடி
  7. சேலம்- 1.75 கோடி
  8. மதுரை- 2.75 கோடி
  9. திருநெல்வேலி (ஜான் பிலிம்ஸ்)- 1.70 கோடி

மொத்த அட்வான்ஸ்- 26.10 கோடி

இதைத்தவிர கேரளா தியேட்டரிகல் ரைட்ஸ், கர்நாடகா தியேட்டரிகல் ரைட்ஸ், தெலுங்கு டப்பிங் ரைட்ஸ், ஹிந்தி டப்பிங் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ், ஓவர்சீஸ் ரைட்ஸ் என இன்னும் பல ஏரியாக்களில் வசூல் வேட்டை புரிய உள்ளது கர்ணன். அதுமட்டுமில்லாமல் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது கலைப்புலி தாணுவிற்கு கிட்டத்தட்ட 25 கோடிக்கு மேல் லாபம் கிடைப்பது உறுதி.

karnan-cinemapettai

karnan

எது எப்படியோ படத்தின் தயாரிப்பாளர் தாணுவிற்கு அடித்தது ஜாக்பாட் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது

LATEST News

Trending News

HOT GALLERIES