காதலரை நெஞ்சோடு அணைத்து கட்டிக்கொண்ட ரைசா வில்சன்.. புகைப்படத்தை பார்த்து டென்ஷனான ரசிகர்கள்
பிரபல நடிகை ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.
துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக நடித்து வருபவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் பெரிய அளவு பெயரைப் பெற்ற ரைசா வில்சன் அதற்கடுத்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படி நடிக்கவில்லை.
நடித்த படங்களும் பெரிய அளவில் செல்லவில்லை. தற்போது சினிமாவுக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டுவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் மாலத்தீவு வெளிநாடு ஆகியவற்றை சுற்றிப்பார்க்க பொட்டி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
இந்நிலையில் ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவரின் மடியில் அமர்ந்துகொண்டு இருக்கமாக கட்டிக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹாட் சிம்பல் போட்டு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போதே வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் ரைசா வில்சன் காதலில் விழுந்துள்ளதாக தெரிகிறது.
raizawilson-lover
ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் துளி அளவும் உண்மை இல்லை என்பது இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.