குக் வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய மரணம் - அதிர்ச்சியளிலும் சம்பவம்
சின்னத்திரை தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இதில் போட்டியாளர்களை சரியாக கணிக்க இரண்டு நடுவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆம் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்.
நேற்று நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து, பவித்ரா வெளியேறினார். அப்போது வெங்கடேஷ் பட் தனது வாழ்க்கையில் நடந்து சில சோக சம்பவங்களை கூறினார்.
இதில் " நான் 4ஆம் வகுப்பு Fail, 6ஆம் வகுப்பு Fail, 9ஆம் வகுப்பு Fail, அதற்கு பிறகு, தாமதமாக நான் ஹோட்டல் மானேஜிமென்ட் சேர்ந்தேன். என் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆகும்போது, என் அம்மா மரணமடைந்தார் " என தனது வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்களை கூறினார்.