திருமணமான நடிகருடன் கள்ளத்தொடர்பு!! விஷயம் லீக்காகி காணாமல் போன வெங்கட் பிரபு பட நடிகை
சினிமாவில் சக நடிகர் நடிகைகள் மீது ஈர்ப்பு வருவது சகஜம் தான். அப்படி திருமணமான நடிகர் மீது ஆசைப்பட்டு கேரியரையே கெடுத்துக்கொண்டுள்ளார் ஒரு நடிகை. நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான கையேதும் தூரத்து படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிகிதா துக்ரல். இப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கிய குறும்பு படத்தில் நடித்தார்.
பின் சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் போன்ற படத்தில் நிகிதா நடிக்க, இதனைதொடர்ந்து சரோஜா படத்தில் கோடான கோடி பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். இதன்பின் கன்னட சினிமாவுக்கு தாவி நடித்து வந்த நிகிதாவுக்கு, கன்னட நடிகர் தர்ஷனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. நடிகர் தர்ஷன் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தான் சிக்கல். நிகிதா - தர்ஷன் இடையேயான காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வர தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி போலிசில் புகாரளித்திருக்கிறார். தன்னை தர்ஷன் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி மனைவி புகாரளித்ததில் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
இதன்பின் நடிகை நிகிதா துக்ரல் கன்னட சினிமாவில் நடிக்க 3 ஆண்டுகள் தடைவிதித்தது. தற்போது தடை நீக்கப்பட்டாலும் நிகிதாவின் மார்க்கெட் போனதால் வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடினார்.