பாடகர் சித் ஸ்ரீராம் மீது பாட்டில்களை வீசிய ரசிகர்கள்

தமிழில் சூப்பரான பாடல்களை பாடி வரும் பாடகர் சித் ஸ்ரீராம் மீது ரசிகர்கள் தண்ணீர் மற்றும் பீர் பாட்டிலை வீசி இருக்கிறார்கள்.

 

கண்ணான கண்னே, தள்ளி போகாதே உள்பட பல பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் சித் ஸ்ரீராம். இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸில் அமைந்துள்ள ஒரு தனியார் பாரில் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். 500 பேர் மட்டுமே அனுமதி என்று கூறப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு அதன் ஏற்பாட்டாளர்கள் மேலும் பலரை அனுமதித்துள்ளனர். 

 

அப்போது கூட்டத்தில் பலர் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சித் ஸ்ரீராம் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது போதையில் இருந்த சிலர் அவர் மீதும் இசை வாசிப்பவர்கள் மீதும் தண்ணீர் மற்றும் பீர் பாட்டிலை வீசியுள்ளனர். இதனால் கோபமடைந்த சித் ஸ்ரீராம் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தினார். 

 

சித் ஸ்ரீராம்

 

பின்பு மைக்கில், ஒரு பிரபல பாடகரை நீங்கள் மதிக்கும் விதம் இதுதானா? என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக சித் ஸ்ரீராம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அதனால் அந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

LATEST News

Trending News