மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன் - காரணம் இது தானா

செல்வராகவன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் சென்ற வாரம் வெளியானது.

இப்படத்திற்காக பல இடங்களில் நேர்காணலில் இயக்குனர் செல்வராகவன் கலந்து கொண்டார்.

அதில் ஒரு பேட்டியில் இயக்குனர் செல்வராகவனிடம் " சாத்தானுக்கும் கடவுளுக்குமான போராக இந்த படத்தில் கதை சொல்லப்படுகிறது " என கேள்வி கேட்கப்ட்டது.

இதற்கு செல்வராகவன் பதில் சொல்லாமல், புன்னகை செய்தபடி இருந்தார். நீங்கள் பதில் சொல்ல வேண்டுமென்றில்லை. ஒரு குறிப்பு மொழியை காட்டினாலே போதும் என்று தொகுப்பாளர் கேட்டார்.

இதற்கு சில நொடிகளில் செல்வராகவன் சிரித்தபடி ஆமாம் என்று கூறியுள்ளார். இதை அவரது ரசிகர்கள் சமுக வலைதளத்தில் சுட்டிக்காட்டவே, தற்போது செல்வராகவன், இதற்கு மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார்.

“நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.” என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News