நடிகை ஷிவானி நாராயணின் ஆனந்த மலைக் குளியல்.. அவர் போட்ட பதிவுகள்..
சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார். ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, மழையில் குளித்தபடி எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் தன் அம்மாவுடன் அவுட்டிங் சென்று எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.