‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்

‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்

தளபதி 65’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குனர் நெல்சன், படப்பிடிப்புக்காக லொகேஷன் தேட ரஷ்யா சென்றுள்ளார். மேலும் ரஷ்யாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நெல்சன். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES