பல கோடி கடனை பிரபல தயாரிப்பாளர் தலையில் கட்டிய சிவகார்த்திகேயன்.. விவரமான ஆளுதான்!
தமிழ் சினிமாவில் அறிமுகமான எட்டே வருடங்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு படுவேகத்தில் முன்னணி நடிகர் என்ற பட்டத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் என பலரும் பல பேட்டிகளில் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒரு படம் தோல்வி கொடுத்தாலும் உடனடியாக அதிலிருந்து மீண்டு வந்து அடுத்த படத்தை பிளாக்பஸ்டராக கொடுத்து விடுகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் தோல்வியை சந்திக்கும் படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் தோல்வி படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் அதன் பிறகு மீண்டு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் சில படங்களை தயாரித்து வெளியிட்டார். அதில் பல கோடி நஷ்டமாம். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா மற்றும் ஹீரோ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்ததால் அந்த தயாரிப்பாளர்கள் பலகோடி நஷ்டத்திற்கு ஆளானார்கள்.
sivakarthikeyan-
சீமராஜா படத்தை தயாரித்த ஆர் டி ராஜா அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த அயலான் படத்தை 3 வருடங்களுக்கு மேலாக எடுத்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். ஆனால் ஹீரோ படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் உஷாராக சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
நஷ்டத்தை சரிகட்ட சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராக இணைந்து சிவகார்த்திகேயன் கடனையும் சேர்த்துக் கட்டி வருகிறாராம் ராஜேஷ். இருந்தாலும் அயலான் மற்றும் டாக்டர் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என வியாபாரத்திற்கு மட்டுமே பல கோடிகளை அள்ளி செலவழித்து வருகிறாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் அவர்களது வீடியோவில் தெரிவித்தனர்.
சிவகார்த்திகேயன் பட வாய்ப்புகள் கொடுத்ததால் மட்டுமே கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் அமைதியாக இருக்கிறாராம். ஒருவேளை டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் சொதப்பினால் சிவகார்த்திகேயன் சட்டையை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.