துப்பாக்கி சூடும் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற தல அஜித்.. உண்மையிலேயே ரியல் ஹீரோ தான்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் தல அஜித்.
இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
தல அஜித் நடிப்பதை ஒரு பக்கம் செய்து வந்தாலும், மறுபுறம் தனக்கு பிடித்த மற்ற விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்.
அதில் ஒன்று தான் துப்பாக்கி சூடுவது. சமீபத்தில் கூட தமிழ்நாடு அளவில் நடைபெறும் துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் தல அஜித்.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடும் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளாராம் தல அஜித். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.