தாயே மகளை படுக்கைக்கு அனுப்பி வைத்த கொடுமை.. காது கூசும் கேவலத்தை செய்த பெரிய நடிகர்..!
திரை உலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு விஷயங்கள் தற்போது இணையங்களை ஆக்கிரமித்து உள்ளது. அந்த வகையில் தற்போது கேரள திரையுலகில் நடப்பது என்ன என்பது பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தினம் தினம் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து நாடே அதிரக்கூடிய வகையில் கேரள அரசின் ஹேமா கமிஷன் நடத்திய விசாரணை தலைப்புச் செய்தியாக 233 பக்க அளவில்.. நடந்தது என்ன? என்பது பற்றி விரிவான தகவல்களை அரசுக்கு வழங்கி உள்ளது
அந்த அறிக்கையில் திரை உலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைகள் பற்றிய விஷயங்களும் பாலியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது போன்ற அனைத்து தகவல்களும் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் உள்ளது.
ஏற்கனவே கேரளத் திரை உலகில் 2017-ஆம் ஆண்டு முன்னணி நடிகையாக திகழ்ந்த பாவனாவை காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் பிரபல கேரள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதனை அடுத்து தான் கேரளா சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல், பாலியல் சமத்துவம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
இந்நிலையில் அந்த கமிட்டியானது 2019-ஆம் ஆண்டிலேயே இது குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த போதும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் அரசு வெளியிடாத நிலையில் தற்போது அது குறித்த விஷயங்கள் வெளி வந்து நாட்டையே உலுக்கியுள்ளது.
இதனை அடுத்து அந்த அரசு முக்கிய நடிகர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்தாமல் உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் காத்திருந்த ஹேமா கமிஷனின் அறிக்கை நான்கு வருடங்களுக்குப் பிறகு 233 பக்கங்களில் வெளி வந்துள்ளது.
இந்த அறிக்கையில் திரை உலகில் இருக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல முக்கிய புள்ளிகளில் 15 பேரின் கட்டுப்பாட்டில் மலையாள திரை உலகம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்த முக்கிய பதினைந்து நபர்கள் தான் சினிமாவில் எந்த நடிகை நடிக்க வேண்டும். எந்த நடிகை நடிக்க கூடாது என்பதை தீர்மானிப்பது என்ற ஜீரணிக்க முடியாத விஷயத்தை தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும் நடிகைகளிடம் பாலியல் ஆத்து மீறல்களில் ஈடுபடக்கூடிய கலாச்சாரம் மலையாள திரை உலகில் அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நடிகைகள் பல தனியாக ஹோட்டலில் தங்குவதற்கு பயப்படக்கூடிய நிலையில் குடும்பத்தோடு தங்குவதாக சொல்லப்பட்டுள்ளது.
இதுபோன்ற சீண்டல்கள் அதிகளவு புது முகங்களுக்கு ஏற்படுவதாகவும் சில சமயங்களில் நடிகைகளின் அம்மாவே இது போன்ற அட்ஜஸ்மட்டுகளுக்கு தங்கள் மகளை அனுப்ப தயாராகின்ற கொடுமைகள் நிகழ்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் பெற்ற மகளைத் தாயே படுக்கைக்கு அனுப்பி வைத்த கொடுமை குறித்து அந்த கமிஷன் முன் ஒரு நடிகை கூறியது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரையில் மினுக்கும் தாரகைகளாக இருக்கும் நடிகைகளை பார்த்து நாம் ஆச்சரியப்பட்டு கைகளையும் தட்டி விசிலை அடிக்க கூடிய நாம் அவர்கள் திரைக்குப் பின்னால் படும் அவஸ்தையே என்றுமே உணர்ந்ததில்லை.
அப்படித்தான் தற்போது நிலைமை உள்ளது. இந்த காது கூசும் கேவலத்தை செய்த பெரிய நடிகர்களின் லிஸ்ட் அந்த 233 பக்க அறிக்கையில் உள்ளது. இனியாவது அந்த நபர்களை அரசு தக்க தண்டனை கொடுத்து இது போன்ற நிலை தொடராமல் இருக்க வழி செய்யுமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியவரும்.