சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘பிசாசு’ பட ஹீரோயின்

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘பிசாசு’ பட ஹீரோயின்

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. அதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.

இதனிடையே நவரசா ஆந்தாலஜியில் கவுதம் மேனன் இயக்கும் கதையில் நடித்து வருகிறார் சூர்யா. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இக்கதையில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ப்ரயாகா மார்டின் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தவர்.

சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 

 


கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் 'நவரசா' என்ற ஆந்தாலஜி எடுக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்று இலவசமாக பணியாற்றியிருக்கிறார்கள்.

மணிரத்னம் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இடம்பெற்றுள்ளது. சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES