அவங்களே எனக்கு ரேட் பேசுவாங்க… அவமானங்களை அவிழ்த்துவிட்ட நடிகை
தமிழ் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சங்கீதா க்ரிஷ். 90ஸ் காலகட்டத்தில் இடைப்பகுதியில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் இடத்தை பிடித்தார் .
தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளிவந்த உயிர், பிதாமகன் ,தனம் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலமாக பரவலாக அறியப்பட்டார் சங்கீதா.
நடிப்பு மட்டுமில்லாமல் இவருக்கு ஏ ஆர் ரகுமானுடன் பணிபுரிந்த அனுபவமும் உண்டு. பிரபலமான நடிகையாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்த சங்கீதா கிரீஸ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்றவாறு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய அளவில் மக்களின் மனதை கவர்ந்திழுப்பார்.
அப்படித்தான் பிதாமகன் திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக இவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருப்பார்.
அந்த ரோல் இன்று வரை மக்களால் மறக்கவே முடியாது. இதனிடையே அவர் சினிமாவில் பீக்கில் இருந்தபோது பிரபல பாடகரான கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் தொலைக்காட்சி நடுவராகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
தொடர்ச்சியாக தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இரண்டு மொழிகளுமே மாறி மாறி நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழை காட்டிலும் அவர் அதிகம் தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்கள் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்.
இதில் எந்த மொழி படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கேள்வி எழுப்பியதற்கு எனக்கு நிச்சயம் தெலுங்கு மொழியில் நடிக்க தான் ஆசைப்படுவேன்.
தெலுங்கு தான் பிடிக்கும். தமிழ் மொழி சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால் இதில் நான் நிறைய அவமானத்தையும் அவமரியாதையும் சந்தித்து இருக்கிறேன் .
தெலுங்கு சினிமாவில் அப்படி நடந்து கொள்ளவே மாட்டார்கள். மிகுந்த மரியாதை கொடுப்பார்கள் என சங்கீதா கூறியுள்ள இந்த பதில் தமிழ் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.
ஆம் நிச்சயமாக தெலுங்கு சினிமாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நல்ல மரியாதை கொடுப்பார்கள். தமிழ் என்றால் அப்படி கிடையாது.
இதனால் தமிழ் மக்கள் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை என வெளிப்படையாக பேசினார். காரணம் தமிழ் சினிமாவில் இருந்து யாரேனும் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என போன் செய்தால் அவர்கள் ஒரு மரியாதையே இல்லாமல் தான் பேசுவார்கள்.
அவங்க ஏதோ எனக்கு வாழ்க்கை தருவது மாதிரியும் … நான் என்னமோ கஷ்டப்பட்டு கரண்ட் பில் கூட கட்ட முடியாம மிகவும் கொடுமையான வறுமையில் இருக்கிற மாதிரி பேசி அனுதாபப்படுவார்கள்.
உங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் என்று அவங்களை முன்கூட்டியே முடிவு எடுத்துடுவாங்க. நீங்க வந்து நடிச்சுட்டு கொடுத்துட்டு போயிடுங்க என்று சொல்வார்கள் .
அவங்க தானே எனக்கு போன் செய்து கூப்பிடுறாங்க? நான் ஒன்றும் வாய்ப்பு கேட்கவில்லை… அவங்களை தானே போன் பண்ணி கேக்குறாங்க? அப்ப நான் தானே என்னோட சம்பளத்தையும் என்னோட ஒர்த்தையும் முடிவு பண்ணனும்.
அவங்க யாரு என்னோட சம்பளத்தை டிசைட் பண்றதுக்கு? எனக்கு அவங்களே முன்னாடியே ரேட் பேசிருவாங்க அதுக்கு பிறகு நான் போய் நடிச்சு கொடுத்துட்டு வந்துடனும் அப்படின்னு சொல்லுவாங்க.
இது மிகப்பெரிய அவமரியாதைக்குரிய விஷயமா நான் பாக்குறேன். ஆனால் தெலுங்கு சினிமாவில் அப்படி இல்லை . நடிகர் நடிகைகளுக்கு சக மரியாதை கொடுப்பார்கள்.
அதனால் தான் எனக்கு தமிழை சுத்தமாக பிடிக்காது. தெலுங்கு சினிமா படங்களில் நடிக்க தான் பிடிக்கும் என சங்கீதா ஓப்பனாக கூறினார்.
அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களை முழுக்க வைரல் ஆகி கோலிவுட் சினிமாவில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.