அவள் நாயாக பிறக்கட்டும்!! நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா போட்ட பதிவு..
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் சமந்தா - நாக சைதன்யா. ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சமந்தா ஒரு நடிகருடன் நெருக்கமாக இருந்தார், அதனால் தான் நாக சைதான்யா விவாகரத்து செய்துகொண்டார் என்று இணையத்தில் தகவல் வெளிவந்தது.
அண்மையில் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், சிலர் விமர்சனங்களும் முன் வைத்து வருகின்றனர். மேலும் நாக சைதன்யா மற்றும் சோபிதா இதற்கு முன் பகிர்ந்த பல பதிவுகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை சோபிதா தன்னுடைய தங்கை சமந்தா பற்றி ஒரு பதிவில் பகிர்ந்துள்ளதை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள். தன்னுடைய பெற்றோர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பா மற்றும் அம்மா எனக்கு பெற்றோராக வரவேண்டும் என்பது எனது விருப்பம்.
மற்றதெல்லாம் எனக்கு தேவையில்லை. என் தங்கை நாயாகவோ அல்லது வேறு எதுவாகவோ பிறக்கட்டும், அது பரவாயில்லை என்று பதிவிட்டிருக்கிறார். தன்னுடைய தங்கை சமந்தாவை இப்படி கூறியிருப்பதை நெட்டிசன்கள் இப்படி சமந்தாவை சொல்லிவிட்டாரே என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.