2027ல் மீண்டும் விவாகரத்து!! நாக சைதன்யா வாழ்க்கையில் விளையாடும் ஜோதிடர் வேணு சுவாமி..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யாவுக்கு திருமண வாழ்க்கை என்பது அவருக்கு சரியே வராது போல் இருக்கிறது. நடிகை சமந்தாவை விவாகரத்த பின் பல ஆண்டுகள் கழித்து நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய நிச்சயதார்த்தத்தை ஆகஸ்ட் 8ல் முடித்தார் நாக சைதன்யா.
சமீபத்தில் பிரபல ஜோதிடர் இணையதளத்தில் நாக சைதன்யா - சோபிதாவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணமும் வரும் 2027ல் விவாகரத்தில்தான் முடியும் என்றும் அதற்கு ஒரு பெண்தான் காரணமாக இருக்க போகிறார் என்றும் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியதில் அது அப்படியே நடந்தது. தற்போது நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த டோலிவுட் ரசிகர்கள் ஒருவரின் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவது மிகப்பெரிய தவறு என்று ஜோதிடர் வேணு சுவாமியை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.