ஒரே நேரத்தில் இருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்!! நடிகை முன்பே ஓப்பனாக பேசிய நடிகர்

ஒரே நேரத்தில் இருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன்!! நடிகை முன்பே ஓப்பனாக பேசிய நடிகர்

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, ஜோஸ், விண்ணத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான Ye Maaya Chesave மூலம் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அதன்பின் நடிகை சமந்தாவுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து வந்த நாக சைதன்யா, அவரை காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி இருவரும் படங்களில் நடித்து ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்தும் வந்தனர். இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். 

விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவுடன் ரகசிய காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் நாக சைதன்யா. அதெல்லாம் உண்மை தான் என்பதற்கேற்ப நேற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தை முடித்திருக்கிறார் நாக சைதன்யா. இந்த தகவலை நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த 3 ஆண்டுகளுக்கு பின் நடிகையுடன் நிச்சயம் செய்துள்ளதை பலரும் விமர்சித்து வரும் நிலையில், நாக சைதன்யா குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி 2018ல் நடிகை அனு இம்மானுவேலுடன் நடித்த Shailaja Reddy Alludu படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளா நாக சைதன்யா. 

அப்போது ஒரே நேரத்தில் இருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து உறவு செய்திருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அனு இம்மானுவேல், நான் யாரை ஏமாற்றியதில்லை என்று கூறினார். ஆனால் நாக சைதன்யா நான் அப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் நடிகர் நாக சைதன்யா.

LATEST News

Trending News

HOT GALLERIES