இந்து பையனை திருமணம் செஞ்சது இதற்கு தான்!! ரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை ஷபானா..
மலையாள சீரியல் நடிகையாக தமிழில் செம்பருத்தி என்ற சீரியலில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஷபானா. இந்த சீரியலில் கடைசிக்கட்டத்தில் சுமுகமான முடிவை எட்டாமல் இருக்க காரணம், கதாநாயகன் பாதியில் சீரியலை விட்டு வெளியேறியது தான்.
அதன்பின் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஷபானா, சீரியல் நடிகை ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்களே இருவருக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் வெளியானது. அதெல்லாம் கிடையாது என்று கூறும் அளவிற்கு கணவருடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ஷபானா.
முஸ்லீம் பெண்ணான ஷபானா இந்து பையன் ஆர்யனை விரும்பியதை அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. செம்பருத்தி சீரியலில் பார்வதி ரோலில் ஷபானா பொட்டு வைத்து நடிக்க குடும்பத்தினர் ஒரு மாதகாலமாக பேசாமல் இருந்துள்ளனர்.
இதனால் அப்போதே ஷபானா இந்து பையனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாராம். இதனை தொடர்ந்து தான் ஆர்யன் மீது காதல் வந்துள்ளது. பெற்றோரை மீறி இந்து முறைப்படி திருமணம் செய்திருக்கிறாராம் நடிகை ஷபானா.