இதெல்லாம் ஒரு மூஞ்சி.. அசிங்கப்படுத்திய மேக்கப் மேன்!! உச்சம் தொட்ட பிரபல நடிகைகள்..
தமிழ் சினிமாவில் தற்போது பெரிய சாதனை படைத்த நடிகைகளின் ஆரம்பகாலக்கட்ட சினிமா கேரியரை திரும்பிப்பார்த்தால் பல வேதனைகள் இருக்கும். பல போராட்டங்களை எல்லாம் சந்தித்து இந்த உச்சத்தை தொட்டிருப்பார்கள். அப்படி இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று பலரால் விமர்சிக்கப்பட்டும், அதுவும் மேக்கப் மேன் கூட ஒரு நடிகையின் தோற்றத்தை பார்த்து மேக்கப் போட தயங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
சமீபத்தில் பேசிய சித்ரா லட்சுமணன், ராதிகா முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை. அப்போது சித்ரா லட்சுமணன் பத்திரிக்கை செய்தி தொடர்பாளராக பணியாற்றிய போது, பத்திரிக்கையில் ராதிகாவின் புகைப்படத்தை போட்டு இந்த படத்தில் ராதிகாதான் ஹீரோயின் என்று அறிவிக்கலாமா என்று பாரதிராஜாவிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால் பாரதிராஜா அதற்கு மறுத்து, 'ராதிகா தான் ஹீரோயின் என்று மட்டும் போடு புகைப்படம் படத்தை தயவு செய்து போடவேண்டாம்' என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் ராதிகாவும் அப்போது மிகவும் குண்டாக இருந்திருக்கிறார்.
மேட்டுப்பாளயத்தில் ஷூட்ட்டிங்கிற்காக செல்ல அங்கு ராதிகாவை பார்த்ததும் பலரும் பாரதிராஜவுக்கு எதற்கு இந்த வேண்டாத வேளை? எப்படி இந்த மாதிரியான நடிகையை தேர்வு செய்தார் என்றெல்லாம் பேசியிருக்கிறார்களாம்.
ராதிகாவை போல் தான் பழம்பெரும் நடிகை டி ஆர் ராஜகுமாரியையும் கருமையான தோற்றத்தில் இருந்து நடிகைக்கான அந்தஸ்தே இல்லாதவராக இருந்தாராம். ஆனால் அவரை கே சுப்பிரமணியம் தான் அறிமுகப்படுத்தினார். ராதிகாவை எப்படி விமர்சித்தார்களோ அப்போதே டி ஆர் ராஜகுமாரியையும் பேசினார்களாம்.
ஏன் கே. சுப்பிரமணியத்திடம் மேக்கப் மேனாக இருந்தவர் கூட டி ஆர் ராஜகுமாரிக்கு மேக்கப் போடவே மறுத்தாராம். அதன்பின் அவர் எப்பேற்பட்ட நடிகையாக மிகப்பெரிய உயரத்தை தொட்டார் என்று அனைவரும் அறிவார்கள்.
இவரை போல் நடிகை ராதிகாவும் 40 வருடத்திற்கு மேலாக சினிமாவில் பயணம் செய்து எப்படியான கதாபாத்திரத்திலும் நடித்து புகழை சேர்த்தார் என்று அனைவரும் அறிவார்கள் என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.