என்னால் அந்த நடிகைக்கு வாய்ப்பே போயிடுச்சு!! உண்மையை கூறி வருத்தப்பட்ட வாணி போஜன்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன், கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது சட்னி சம்பார் என்ற வெப் தொடரில் நடித்துள்ள வாணி போஜன் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், தன்னால் ஒரு நடிகைக்கு வாய்ப்பே போனது என்ற உண்மையை கூறியிருக்கிறார். நான் பெரிய படங்களில் நடிக்கவில்லை, கிடைக்கவில்லை என்று பலர் என்ன வேண்டுமானாலும் நடித்து கொள்ளட்டும். புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும். நான் நடிக்கமுடியாது சொன்ன படத்தில் இவர்கள் நடித்தால் எனக்கு மகிழ்ச்சி தான். அதில் நான் பண்ணலையே என்று வறுத்தப்படக்கூடாது.
ஒரு படத்தின் கதையை நான் கேட்டேன், எனக்கு பிடிக்கவில்லை. அதற்கு காரணம் இது தப்பாக போய்விடுமோ என்று நோ சொல்லிவிட்டேன். மேலும் ஒரு படம் பண்ண வேண்டி இருந்தது, இப்போது பண்ணிட்டு இருக்கேன். அந்த இயக்குனர் என்னிடம் கதை சொன்னார். போனில் தான் கதைக்கேட்டேன். எனக்கு வேண்டாம், கதை எனக்கு செட்டாகாது என்று கூறிவிட்டேன் நோ சொல்லிவிட்டேன். அவர் அடுத்து நடிகை ரித்திகா சிங்கிடம் சென்றுவிட்டார்.
இதை, எனக்கு தெரிந்தவர்கள் கேட்டு, என்னை தொடர்பு செய்து ஏன் இந்த படத்தில் நடிக்காமல் நோ சொன்ன என்று கேட்டார்கள். எனக்கு ரித்திகாவிடம் போனது தெரியாது, ரித்திகாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உடனே இயக்குனருக்கு தொடர்பு செய்து, கதையை நேரில் வந்து கேட்கலாமா என்று கேட்டப்பின் நெரில் சென்று கதையை கேட்டேன். கதை சூப்பராக இருந்தது, போனில் வேறமாதிரி விவரமாக சொன்னார்.
நானும் ஓகே என்று சொன்னதும், இன்று வேறொரு நடிகைக்கு காசோலை கொடுக்க வேண்டி இருந்தது, நீங்கள் வந்ததால் உங்களை ஓகே செய்கிறேன் என்று சொன்னார். ரித்திகா சிங் ஒகே சொன்னது தெரிந்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது.
ஆனால் எனக்கு நன்றாக தமிழ் பேசும் நடிகை வேண்டும் என்பதால் என்னை ஓகே செய்வதாக கூறினார். அதன்பின் நான் ரித்திகாவை பார்க்கவே இல்லை என்று நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.