திருமணமாகி ஒரு மாதம்.. நீச்சல் குளத்தில் ஹனிமூன் கொண்டாடும் பிரபல நடிகை..!

திருமணமாகி ஒரு மாதம்.. நீச்சல் குளத்தில் ஹனிமூன் கொண்டாடும் பிரபல நடிகை..!

பிரபல நடிகைக்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆனதை அடுத்து தாய்லாந்தில் நீச்சல் குளத்தில் ஹனிமூன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ என்ற தமிழ் திரைப்படத்தின்; நாயகி ஆக நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான சோனாக்சி சின்ஹா, கடந்த ஜூன் மாதம் ஜாகிர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சோனாக்சி சின்ஹாவுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் முடிவடைந்ததை அடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் இருவரும் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். அது குறித்த புகைப்படங்களை சோனாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் சோனாக்ஷி சின்ஹா அவரது கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் உட்பட பல்வேறு புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்படங்களுக்கு சுமார் 7 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் அவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் மற்றும் சோனாக்சி சின்ஹாவின் தந்தை சத்ருகன் சின்ஹா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES