என் புருஷன் என்னை குத்தகை எடுத்துள்ளார் .. மைனா நந்தினி வெளியிட்ட தகவல்..!
தமிழ் சினிமாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மைனா நந்தினி .
மதுரையை சேர்ந்த பெண்ணான இவர் பார்ப்பதற்கு மாநிறத்தில் மிகப்பெரிய பந்தா ஏதும் இல்லாமல் மிகவும் நார்மலாக சாதாரண பெண் போன்று மீடியா உலகில் நுழைந்தார்.
பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். இவர் முதல் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .
இதன் மூலம் இவர் மைனா நந்தினி என மிகப்பெரிய அளவில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. அதன் மூலம் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா , ரோமியோ ஜூலியட் , காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் நம்ம வீட்டு பிள்ளை , பெட்ரோமாக்ஸ் , அரண்மனை 3 , விக்ரம் போன்ற பல திரைப்படங்களில் மைனா நந்தினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக பார்க்கப்பட்டார்.
தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் அடுத்தடுத்து நடித்து வரும் மைனா நந்தினி கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவருக்கு இந்த திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. திருமணமான அதே ஆண்டிலேயே கார்த்திகேயனும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் .
அதன் பிறகு தலைமையில் வாழ்ந்து வந்த நடிகை மைனா நந்தினி 2019 ஆம் ஆண்டு மீண்டும் யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்கள். யோகேஸ்வரனுடன் மைனா நந்தினி மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
அதை அவர் அவ்வப்போது கலந்து கொள்ளும் பேட்டிகளில் பார்த்தாலே தெரிய வரும். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக திரையதுறையில் நடிகையாக அறிமுகமாகி ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் மைனா நந்தினி .
அதுதான் அவரது அறிமுக திரைப்படமாகவும் அமைந்தது. அதன் பிறகு தான் அவர் தொலைக்காட்சிகளிலும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்களும் பங்கேற்று வந்தார்
கலக்கப்போவது யாரு போட்டியாளராக பங்கேற்ற அவர் வம்சம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த வாய்ப்பை தொடர்ந்து அவருக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா , வெள்ளைக்காரதுரை , ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மைனா நந்தினி. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் மைனா நந்தினி.
அப்போது ஆங்கர் அவரிடம், நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது உங்களது கணவரிடம் நான் வெளியில் வந்து பாக்குறதுக்குள்ள நீ எதுனா கல்யாணம் பண்ணிடாத அப்படின்னு சொல்லியிருந்தீங்க என கேட்டதற்கு….
இல்ல ப்ரோ…. அவர் அந்த மாதிரி பண்ண மாட்டாரு. காரணம் நாங்கள் கிட்டத்தட்ட 99 வருடத்திற்கு ஒரு அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறோம்.
இருவரும் எதுவுமே செய்யக்கூடாது என்று, கிட்டத்தட்ட 99 வருஷம் என்னை அவர் லீசுக்கு எடுத்து இருக்கிற மாதிரி வச்சிருக்காரு .
அதனால அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு. ஒருவேளை அவருக்கு யாரையேனும் பிடித்திருந்தால் நானே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுருவேன் என கூறினார் .
இதை கேட்டதும் ஷாக் ஆன ஆங்கர், அப்படியா… ரொம்ப அற்புதமா இருக்கே என்று சொல்ல….. உடனே மைனா….. அப்படி சொன்னாதான் யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.
நம்ம கூடவே சுத்தி சுத்தி வருவாங்க என்று பேசி இருந்தார். மைனா நந்தினியின் இந்த கலகலப்பான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.