அனிமல் பட நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் தனுஷ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லப்பா..

அனிமல் பட நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் தனுஷ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லப்பா..

தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என்று கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் தனுஷ், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது ராயன் படத்தில் இயக்கி நடித்திருக்கும் தனுஷ், படத்தின் ஆடியோ லான்சில் கலந்து கொண்டு மாஸ் ஸ்பீச் கொடுத்திருந்தார்.

ராயன் படத்தினை தொடர்ந்து குபேரா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு Tere Ishk Mein என்ற பாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகினார்.

இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் நடிக்கவுள்ளார் தனுஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகவுள்ள இப்படத்தில் யார் ஜோடியாக நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

தற்போது இப்படத்தில் நடிக்க அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை டிரிப்தி டிம்ரி தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி வரும் நடிகை டிரிப்தி, தற்போது நடிகர் விக்கி கெளசல் நடிப்பில் Bad Newz படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES