பக்கத்தில் உட்கார்ந்த முன்னாள் காதலர்.. நடிகை நயன்தாரா எடுத்த அந்த முடிவு.. பற்றவைத்த பிரபலம்

பக்கத்தில் உட்கார்ந்த முன்னாள் காதலர்.. நடிகை நயன்தாரா எடுத்த அந்த முடிவு.. பற்றவைத்த பிரபலம்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக நடிக்க ஆரம்பித்து புது மார்க்கெட்டை உருவாக்கியிருப்பவர் தான் நடிகை நயன் தாரா. தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகை நயன் தாரா, பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் விக்னேஷ் சிவனுடம், தன் இரட்டை குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக பயணித்து வரும் நடிகை நயன் தாரா, ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்களில் சிக்கி வந்தார். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியதற்கு பின் பேட்டிகள் கொடுப்பதிலும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் கலந்துக்கொள்ளக் கூடாது என்ற கொள்கையை கொண்டுள்ளார்.

ஆனால் சமீபத்தில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகும் நேசிப்பாயா படத்தின் விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். நயன் தாரா ஏன் சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை சினிமா விமர்சகர் பிஸ்மி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நயன் தாராவுக்கென்று ஒரு ஷோஃபா போடப்பட்டிருந்தது.

அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் முன்னாள் காதலர் நடிகர் சிம்பு, நயன் தாரா பக்கத்தில் சென்று அமர்ந்துள்ளார். அது நயன் தாராவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததுள்ளது. பின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்கு மெசேஜ் செய்து வேறு இடத்தில் சென்று அமர்ந்துள்ளார்.

பக்கத்தில் உட்கார்ந்த முன்னாள் காதலர்.. நடிகை நயன்தாரா எடுத்த அந்த முடிவு.. பற்றவைத்த பிரபலம் | Bismi Says Simbu Reason Nayanthara Avoid Events

இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இதுபோல் நிகழ்வுகள் நடக்கலாம் என்று தான் நயன் தாரா பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்று பிஸ்மி கூறியிருக்கிறார். ஆனால் நயன் தாரா அவர் தயாரிக்கும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விடாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES