கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய ரசிகர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!

கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய ரசிகர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!

நடிகர் சக்தி கபூரின் மகள் ஷ்ரத்தா கபூர், 2010ஆம் ஆண்டு டீன் பட்டி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர், லவ் கா தி எண்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றதை தொடர்ந்து, ஆஷிகி 2 படத்தில் நடித்தார். இப்படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ஷ்ரத்தா கபூர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷ்ரத்தா கபூர், அங்கிருந்து வெளியேறும் போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தனர். அந்த இடத்தில் இருந்த பெண்களிடம் பேசிவிட்டு நகர்ந்தபோது, ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது சிலர் புகைப்படம் எடுக்க முயன்றனர், சிலர் அத்துமீறியும் தொட்டனர்.

அந்த இடத்தில் கூட்டம் அதிகமாகியதால், பாதுகாவலர்கள் தடுக்க முடியாமல் போனார்கள். கடைசியில், ஒரு வழியாக ஷ்ரத்தா கபூரை காரில் ஏற்றிவிட்டனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES