மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..

மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து பல ஆண்டுகள் கழித்து பிரியவுள்ளதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இந்த சம்பவம் மிகப்பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இவர்கள் பற்றி பலர் பலவிதமான தகவல்களை கூறி வந்தனர்.

இருவரும் சேருவார்களா இல்லை விவாகரத்து பெற்றுவிடுவார்களா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்து வந்தது. இந்நிலையில், ஜிவி பிரகாஷ் - சைந்தவி பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள சார் என்ற படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இசையமைப்பாளர் சித்து இப்படத்திற்கு இசையமைக்க பனங்கருக்கா என்ற சிங்கிள் பாடலை. ஜிவி பிரகாஷ் - சைந்தவி இணைந்து பாடியிருக்கிறார்கள். விவேகா எழுதி இப்பாடலை ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவதாக அறிவிப்பதற்கு முன்பே பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது இருவரின் குரலில் பணங்கருக்கா பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

LATEST News

Trending News