சிவகார்த்திகேயனுடன் நடிகை திரிஷாவா!! வைரலாகும் வீடியோ..

சிவகார்த்திகேயனுடன் நடிகை திரிஷாவா!! வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் திரிஷா, இடையில் சில வதந்தி செய்திகளிலும் சிக்கி வந்தார்.

சமீபத்தில் கூட சுசித்ரா, திரைப்பிரபலங்களின் அந்தரங்க விசயங்களை கூறியதை போன்று திரிஷாவின் பார்ட்டி விஷயத்தையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து திரிஷாவை பற்றி பலரும் பலவிதமாக விமர்சித்து கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில் மாடலிங் துறையில் இருந்த திரிஷா திரைப்படங்களை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த போது நடிகை திரிஷாவுடன் ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

விவல் சோப் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News