தனுஷின் 'மாறன்' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷின் 'மாறன்' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகுமா? அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் சற்று முன் சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு இந்த மோஷன் போஸ்டர் பொங்கல் விருந்தாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES