என் திறமையைக் கண்டறிந்ததற்கு நன்றி… சமந்தா வெளியிட்ட வீடியோ

தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.

தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.

சிம்புவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது விண்னைத் தாண்டி வருவாயாதான். அந்த அளவுக்கு அவரிடம் இருந்து சிறப்பான நடிப்பை வாங்கியிருப்பார் கௌதம் மேனன். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரஹ்மானோடு அவர் முதல் முதலாகக் கூட்டணி அமைத்த படம் அதுதான். அதற்கேற்றார்போல பாடல்களும் எவர் க்ரீன் ஹிட்டாகின. அதே போல இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படத்தில் சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த படம் 2010 ஆம் ஆண்டு இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தின் 11 ஆம் ஆண்டை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து சமந்தா வெளியிட்ட வீடியோவில் கௌதம் மேனன் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘என்னுள் ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்த கௌதம் மேனனுக்கு நன்றி. ஏனென்றால் எனக்கே அப்போது என் திறமை பற்றி தெரியவில்லை. இந்த பதிவை படித்துக் கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.’ எனக் கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES