தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக விளங்கும் தளபதி விஜய், தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அதன் விளைவாகவே அவருடைய படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் தாறுமாறாக ஓடி பட்டையைக்கிளப்பும்.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக விளங்கும் தளபதி விஜய், தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அதன் விளைவாகவே அவருடைய படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் தாறுமாறாக ஓடி பட்டையைக்கிளப்பும்.
எனவே தற்போது பிரபல இயக்குனர் சேரன் பேட்டி ஒன்றின் மூலம் தளபதி விஜய்யை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில் சேரன், ‘ஆட்டோகிராப் படத்திற்கு பிறகு, விஜய் சார் என்னிடம் கதை கேட்டார்.
அவர் கதை கேட்கும் ஸ்டைல் அப்படியே சிவாஜியை பார்ப்பது போன்றே இருந்தது. ஏனென்றால் இரண்டு மணி நேரமாக கதை சொன்னாலும், அதை பொறுமையாக அமர்ந்து கதை கேட்டதை பார்க்கும்போது, எனக்கு சிவாஜி சார் ஞாபகம் தான் வந்தது.
அதன்பின் தளபதி விஜய் என்னுடைய கதையை ஓகே சொல்லி, படப்பிடிப்பிற்கான தேதியும் கொடுத்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் எனது தவமாய் தவமிருந்து படத்தின் ஷூட்டிங் சென்று சென்று கொண்டிருந்ததால், தளபதி விஜய்யின் படத்தை இயக்கத் தவறிவிட்டேன்.
seran
இன்றுவரை அந்த தவறை சரி செய்ய முடியாமல் காலம் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை விஜயுடன் நான் அந்தப் படத்தை செய்திருந்தால், என்னுடைய வாழ்வில் அடுத்த நிலைக்கு சென்றிருப்பேன் என்று, இப்பொழுது வரை வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றேன்’ என பிரபல இயக்குனர் சேரன் தனது பேட்டியின் மூலம் மனம் திறந்துள்ளார்.