கௌதம் மேனன் சிம்பு பட டைட்டில் எந்த படத்திலிருந்து வந்திருக்கிறது தெரியுமா? சூப்பர் படத்தின் காம்பினேஷன்!

கௌதம் மேனன் சிம்பு பட டைட்டில் எந்த படத்திலிருந்து வந்திருக்கிறது தெரியுமா? சூப்பர் படத்தின் காம்பினேஷன்!

நடிகர் சிம்புவின் படங்கள் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். அண்மையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படம் சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறலாம்.

அடுத்தடுத்தாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் இயக்குனர் கௌதம் மேனனுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே 2010 ல் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வந்த விண்ணை தாண்டி வருவாயா படம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்று. இப்படத்தில் காட்சிகளை கௌதம் மேனன் மிக அழகாக அமைத்திருந்தார்.

ஊரடங்கு காலத்தில் கடந்த மே மாதத்தில் இப்படத்தின் தொடர்ச்சி போல 12 நிமிட குறும்படமாக வெளியிட்டார். இதில் சிம்பு மற்றும் திரிஷா தொலைபேசி வழியாக உறையாடுவது போலிருந்தது.

LATEST News

Trending News

HOT GALLERIES