இளம் நடிகையை அடித்த பாலா.. படப்பிடிப்பில் இருந்து தெறித்து ஓடிய நடிகை..

இளம் நடிகையை அடித்த பாலா.. படப்பிடிப்பில் இருந்து தெறித்து ஓடிய நடிகை..

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகர்கள் இருப்பது போலவே இயக்குனர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பாலச்சந்தர் முதல் பாக்கியராஜ் வரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்களின் வரிசையில் இயக்குனர் பாலாவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள கதைகளை தருவதில் மிகவும் சாமர்த்தியசாலியாக விளங்குகிறார்.

திரைப்பட நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அது போல பாலாவின் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் ரசிகர் படை உள்ளது. அந்த அளவு எதார்த்தமான கதைகளையும், வித்தியாசமான கதையையும் ஒரு வேறுபட்ட வித்தியாசமான கண்ணோட்டத்தில் தருவதில் வல்லவர்.

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் பாலா இயக்கிய சேது படம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சேது படத்தை அடுத்து நான் கடவுள், நந்தா, பிதாமகன், பரதேசி போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கிய இவர் பல்வேறு நடிகர்களின் வாழ்க்கையில் வெற்றியைத் தந்திருக்கிறார்.

பாலாவின் படத்தில் நடித்த விட்டால் கண்டிப்பாக திரைப்படங்களில் நடித்து பிரபலங்களாக மாறிவிடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பல இளம் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு மத்தியில் காணப்படுவது உண்மைதான்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா மிகவும் கடுமையாகவும், கண்டிப்போடும் நடந்து கொள்வார். அவரை சமாளித்து அந்த படத்தில் நடித்து முடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.

அதுமட்டுமல்லாமல் அவர் செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் சில நடிகர் மற்றும் நடிகைகள் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள் என்று கூட சில விஷயங்கள் அவ்வப்போது கசிந்துவரும்.

இந்நிலையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாவிட்டால் பாலா அந்த நடிகர் மற்றும் நடிகைகளை அடித்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வரிசையில் தற்போது பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ இயக்குனர் பாலா குறித்து சில அதிர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

 

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது என்றால் பாருங்களேன்.

இதற்கு காரணம் பாலா தற்போது இயக்கி வரும் வணங்கான் திரைப்படம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டாம். ஏற்கனவே எந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து கடைசியில் அவர் எந்த படத்தை விட்டு விலகிய நிலையில் வேறு நடிகர் மற்றும் நடிகைகளை வைத்து எந்த படத்தை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல மலையாள நடிகை நமீதா பைஜூவும் இந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார்.

இதற்கு உரிய உண்மையான காரணம் என்னவென்றால் படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவை அடித்திருக்கிறார். மேலும் இவர் ஒரு காட்சியில் மூன்று முறைக்கு மேல் நடித்தும் இயக்குனருக்கு திருப்தி ஆகாத நிலையில் அந்த காட்சியை சரியாக இவர் புரிந்து கொள்ளவில்லை. எனவே தான் மூன்று டேக் ஆகியுள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் பாலா நடிகை மமீதா பைஜூவின் தோள்பட்டையில் அடித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை நடிகை மமிதா பைஜூ சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார்.

LATEST News

Trending News