ரெண்டு மணி நேரத்துக்கு 1300000 ரூபாய்.. புது ரூட்டில் நடிகை மீனா.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..
திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைதுறையில் நிலைத்திருக்கும் நடிகையாக விளங்குகிறார்.
நடிகை மீனாவை அனைவரும் கண்ணழகி என்று அன்போடு அழைப்பார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பினை படித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த வெற்றி கொடி கட்டு, வானத்தைப்போல, முத்து, பொற்காலம், நாடோடி மன்னன், அண்ணாத்த, அன்புள்ள ரஜினிகாந்த், செங்கோட்டை, தாய்மாமன், எஜமான், என் ராசாவின் மனசிலே போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இவரது நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சில ஐட்டம் பாடல்களுக்கும் நடனம் ஆடி அசத்தியிருக்கும் நடிகை மீனா சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலில் பக்காவாக தனது நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் முந்தானையால் முடிந்து கொண்டவர்.
திருமணத்திற்கு பிறகு அதிக அளவு திரைப்படங்களில் நடிக்காத நடிகை மீனா குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் சின்னத்துரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலை காட்டி வந்தார்.
இவர் பெங்களூருவை சேர்ந்த மென் பொருளாளரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஊரடங்கு காலகட்டத்தில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பாதிப்பில் இருந்து தற்போது வெளி வந்து இருக்கிறார். இவளின் மகள் நைனிகாவும் ஐந்து வயதில் தெறி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.
90 காலகட்டத்தில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக இருந்த நடிகை மீனா சிறிது காலம் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்பு அண்மைக்காலமாக நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார். அது நிமித்தமாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதர் ஒரு பேட்டியில் மீனாவைப் பற்றிய திடுக்கிடும் தகவலை கூறி இருக்கிறார்.
அந்த வகையில் பிரபல youtube நிறுவனம் மீனா விடம் பேட்டி கேட்டு சென்று இருக்கிறார்கள். அதற்கு மீனா எவ்வளவு மணி நேரம் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் என்றதுமே உடனே 13 லட்சம் கொடுங்க என்று மீனா கேட்க நிறுவனமும் வளர்ச்சி அடைய வேண்டிய நிலையில் உயர்ந்து வருவதால் 13 லட்சம் ரூபாய் கொடுத்து இரண்டு மணி நேர பேட்டிக்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து என்ன மீனா புது ரூட்டில் இப்படி இறங்கிட்டாங்க.. இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் என்று ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்து விட்டார்கள்.
தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆவல் காட்டி வரும் நடிகை மீனாவுக்கு இனி வரும் காலங்களில் குண சித்தர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். மேலும் இவரது வரவை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.