பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தால் இவர் தான் ஹீரோயின்: சிவகார்த்திகேயன்

பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தால் இவர் தான் ஹீரோயின்: சிவகார்த்திகேயன்

பான் இந்தியா திரைப்படத்தில் நடித்தால் இவர் தான் ஹீரோயின் என சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

தற்போது தமிழ் திரையுலகில் உள்ள மாஸ் நடிகர்கள் அனைவருமே பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகின்றார்கள் என்பதும், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆவதால் அகில இந்திய ஸ்டாராக மாறி விடுகிறார்கள் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தால் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் ஹீரோயின் யார் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ‘நான் பான் இந்தியா திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தால் ஏஆர் ரகுமான் சார் தான் இசையமைப்பாளர் என்றும் இயக்குனர் ரவிக்குமார் தான் என்றும் அதே போல தான் ஹீரோயின் ஆலியா பட் தான் என்றும் நான் தான் ஹீரோ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டணி கண்டிப்பாக பேண்டஸி படமாக தான் கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி ‘அயலான்’ திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாகத்தான் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘எஸ்கே 21’ படத்தில் சாய்பல்லவி இணைந்தது குறித்து கூறிய சிவகார்த்திகேயன், ‘இந்த படத்தில் சாய் பல்லவி இணைந்ததற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான் காரணம் என்றும், சாய் பல்லவி உடன் நடிப்பது பெரிய சவால் என்றும் குறிப்பாக அவருடன் நடனமாடுவது கொஞ்சம் கஷ்டம் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

LATEST News

Trending News

HOT GALLERIES