“பருவ வயதில் சின்னதாக இருந்தது இது.. என் காதலன் வந்த பிறகு பெருசு ஆச்சு..” பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!
நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை நடிகையாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்த இவர் தற்பொழுது சினிமா நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவரை சுற்றி பல்வேறு காதல் கிசுகிசுக்கள் வந்த நிலையில் தன்னுடைய உண்மையான காதலர் இவர்தான் என்று தன்னுடைய கல்லூரி கால காதலனை அறிமுகப்படுத்தினார் நடிகை பிரியா பவானி சங்கர்.
அவருடைய பெயர் ராஜவேலு என்றும் தற்போது இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள் என்றும் தெரிகிறது. ஆனால், இன்னும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா பவானி ஷங்கரிடம், உங்களை பொறுத்தவரை கவர்ச்சியான மற்றும் சூடான ஒரு ஆண் என்றால் யாரை கூறுவீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் கண்டிப்பாக என்னுடைய காதலன் தான் ஏனென்றால், என்னுடைய 16,17 வயதில் எனக்கு என் மீது சுய நம்பிக்கை என்பது சின்னதாக இருந்தது.
என்னுடைய காதலன் வந்த பிறகுதான் என்னுடைய சுய நம்பிக்கை பெரிது ஆனது. உலகிலேயே நான்தான் மிகவும் அழகான அறிவான பெண் என்ற உணர்வை கொடுத்தார் என்னுடைய காதலன்.
இப்போது மட்டுமல்ல 80 வயதானாலும் நான் உன்னை அழகாக பெண்ணாக உணர வைப்பேன் என கூறுவார் என தன்னுடைய காதலன் குறித்து ப்ரியா பவானி சங்கர் பேசியிருக்கிறார்.