இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித்திற்கு ஏற்பட்ட பிரச்சனை.. படப்பிடிப்பில் நடந்தது என்ன

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித்திற்கு ஏற்பட்ட பிரச்சனை.. படப்பிடிப்பில் நடந்தது என்ன

அஜித் முதல் முறையாக மகிழ் திருமேனியுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், மகிழ் திருமேனியுடன் அஜித்திற்கு சிறிதாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

அஜித்திற்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது இவர் தான். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் விடாமுயற்சி திரைப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக கமிட்டானார்.

மகிழ் திருமேனியுடன் அஜித்திற்கு ஏற்பட்ட பிரச்சனை

 

ஆனால், படப்பிடிப்பு இடையிலேயே நீரவ் ஷா வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் புதிய ஒளிப்பதிவாளராக விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.

மகிழ் திருமேனிக்கும் நீரவ் ஷாவிற்கும் இடையே சரிவரவில்லை என்பதனால் தான் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித்துக்கு சற்று மனசங்கடம் ஏற்பட்டுள்ளதாம்.

இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித்திற்கு ஏற்பட்ட பிரச்சனை.. படப்பிடிப்பில் நடந்தது என்ன | Ajith Magizh Thirumeni Conflict

 

மேலும் படப்பிடிப்பு இதுவரை 50 சதவீதம் தான் முடிவடைந்துள்ளதாம் பிப்ரவரி இறுதி வரை மட்டுமே அஜித்தின் கால்ஷீட் இருக்கும் நிலையில் இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மகிழ் திருமேனி முடித்துள்ளார். இதனால் உடனடியாக தயாரிப்பாளருக்கு இதுகுறித்து பேசியுள்ளார் அஜித்.

தயாரிப்பாளரிடம் பிப்ரவரிக்கு பிறகு கால்ஷீட் இல்லை, அதனால் அதற்குள் படத்தை முடிக்க சொல்லுங்கள் என கூறிவிட்டாராம். அஜித்திற்கும், மகிழ் திருமேனிக்கும் இடையே உரசல் வர இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES