அவ வீட்டுக்கு வரக்கூடாது!! பூர்ணிமாவின் அம்மா பேட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டம் நோக்கி செல்கிறது. இந்த சீசனில் மாயா, பூர்ணிமாவை ரசிகர்கள் மிகவும் மோசமாக ட்ரோல் செய்தனர்.
அதற்கு காரணம் இருவரும் இடையேயான நட்பு. மற்ற போட்டியாளர்களை எப்படி வெளியே அனுப்பவேண்டும், குரூப்பாக சேர்ந்து ஒருவரை தாக்குவது போன்ற நடவடிக்கையால் மாயா, பூர்ணிமா இருவரும் மீதும் அதிக நெகடிவ் கமெண்ட்கள் வந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணிமாவின் அம்மா பிக் பாஸ்ஸில் நடக்கும் சம்பவங்களை குறித்து பேசியுள்ளனர். அதில் அவர், பூர்ணிமா மீது நெகடிவ் கமெண்ட் அதிகம் வருகிறது.
அப்படிபட்ட நெகட்டிவ் கமெண்டோடு அவள் வீட்டுக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். சப்போர்ட்டாக பேசியதால் அனுப்பி வைத்தேன். இப்போது சரியாக விளையாடி வருகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம் என்று பூர்ணிமா அம்மா கூறினார்.