இரண்டு வீடு, ஆனால் ஒரே கிச்சன்.. அதிரடியாக தொடங்கியது பிக் பாஸ் 7...
பிக் பாஸ் 7ம் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. இந்த முறை இரண்டு வீடுகள் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தொடக்க விழா தொடங்கியதும் கமல் லோக்கல் சென்னை பாஷை பேசும் கெட்டப்பில் வீட்டுக்குள் சென்று பேசுகிறார்.
வெளியில் ஒரு கமல், வீட்டுக்குள் இன்னொரு கமல் என மொத்தம் இரண்டு பேரா என ரசிகர்கள் ஆச்சர்யம் ஆகி இருக்கின்றனர்.
மொத்தம் இருக்கும் இரண்டு வீடுகளையும் காட்டிய கமல், இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தையும் கூறினார்.
ஒரே கிச்சன் மட்டும் தான் இருக்கும் என கமல் கூறியுள்ளார். அதனால் இதை வைத்து தான் போட்டியாளர்கள் நடுவில் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கலாம்.