மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் லைகா. முதல் படமே பிரமாண்டமா..!

மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் லைகா. முதல் படமே பிரமாண்டமா..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் ஏற்கனவே கன்னட திரையுலகில் களமிறங்கியுள்ள நிலையில் தற்போது மலையாள திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான ’லூசிபர்’ என்ற திரைப்படம் நடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 175 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்த நிலையில் ’லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தீபக் தேவ் என்பவர் இசையமைக்கவுள்ளார்.

LATEST News

Trending News