" டயானா"வை “ நயன்தாரா” வாக மாற்றியது யார்...
“நயன்தாரா” என்ற பெயருக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யக்கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்துடன் இருந்து வரும் நடிகை தான் நயன்தாரா.
இவர் கோலிவுட்டை பொருத்த வரையில் நிறைய படங்கள் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
கோலிவுட்டை விட்டு பாலிவுட்டில் கால்பதித்துள்ள நயன்தாரா அவரின் உண்மையான பெயர் இது இல்லையென பேட்டியொன்றில் கூறியிருந்தார். அப்படியாயின் நயன்தாராவின் உண்மையான பெயர் “ டயானா மரியம் குரியன்” என்பதாகும்.
இந்த பெயரிற்கு பின்னால் ஒரு கதை இருப்பதாகவும் கூறி விட்டு கதையை தொடர்ந்து கூறியுள்ளார்.
நயன்தாரா மாடலிங் வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் பொழுது மலையாள இயக்குனரான சத்யன் அந்திக்காட் “மனசினக்கரே” என்ற படத்திற்கு நடிக்க வைத்துள்ளார்.
பின்னர் ஒரு நாள் நயன்தாராவை பார்த்து “ உங்கள் பெயரை கொஞ்சம் மாற்ற வேண்டும் சம்பதமா?” என கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சென்றுள்ளது.
ஒரு நாள் நயன்தாரா இயக்குநரை பார்த்து “ இப்போ எனக்கு வைக்கிறீங்களா? இல்லையா? ” என கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர் 20 - 30 பெயர்கள் இருக்கின்றன. “ இதிலிருந்து ஏதாவது எடு!” என கூறியுள்ளார்.
அப்போது நயன்தாரா எடுத்த பெயர் தான் “நயன்தாரா” என புன்னகையுடன் பகிர்ந்துள்ளார்.