நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் 7: இரண்டு வீட்டிற்குள் செல்லவுள்ள 20 போட்டியாளர்கள்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 20 பேரின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும்.
அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள். அதுபோல தமிழில் 6 சீசன்கள் முடிந்து தற்போது 7ஆவது சீசன் நாளை ஆரம்பமாகவுள்ளது.
அதிலும் அனைவரும் குழம்பிப் போகும் வகையில் இரண்டு வீடு இருக்கிறது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் முன்னதாக அறிவித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமடையவேண்டும் என்று எண்ணத்தில் பலர் கலந்துக் கொண்டு மக்களின் மனதில் நின்றவர்களும் இருக்கிறார்கள்.
அவ்வாறு பிக்பாஸில் கலந்து கொண்டு தானும் பிரபலமாக வேண்டும் என்று 20 போட்டியாளர்கள் களமிறங்கவிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்
- மாடல் அழகி அனன்யா ராவ்
- பாரதி கண்ணம்மா விணுஷா தேவி
- நடிகை விசித்ரா நடிகர்
- பாடகர் யுகேந்திரன்
- வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா
- டான்சர் மணிச்சந்திரா
- நடிகர் விஷ்ணு விஜய்
- நடிகை தர்ஷா குப்தா
- நடிகர் பப்லு பிரித்திவிராஜ்
- நடிகை ரவீனா
- VJ அர்ச்சனா நடிகர்
- டான்சர் விஜய் வர்மா
- விஜய் டிவி புகழ் சரத்
- சூழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன்
- நடிகை உமா ரியாஸ் கான்
- நடிகை மூன் நூல் நிலா
- நடிகர் சரவணன் விக்ரம்
- இந்திரஜா ரோபோ சங்கர்
- நடிகர் பால சரவணன்
- நடிகர் சத்யா