இசை வெளியீட்டு விழா நின்றது, பரபரப்பு போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்- செம வைரல்..!
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் லியோ தான்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்க திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி தான் லியோ படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது என்பது தான்.
லியோ ஆடியோ வெளியீட்டு விழா நின்று போக செங்கல்பட்டு விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில் ஆடியோ லான்ச் இல்லைனா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி என போஸ்டர் ஒட்ட அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.