பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமை என்ன? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா...

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமை என்ன? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா...

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 6 சீசன்கள் முடிந்து தற்போது 7ஆவது சீசன் ஆரம்பிக்கவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமடையவேண்டும் என்ற எண்ணத்தில் பலர் கலந்துக் கொள்வார்கள்.

அப்படி மக்கள் மனதில் இடம்பிடித்த முன்னைய டைட்டில் வின்னர்கள் தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமை

முதலாவது சீசனின் வெற்றியாளராக இருந்த ஆரவ் நபீஸ் டைட்டிலை கைப்பற்றினார். நிகழ்ச்சிக்குப் பிறகு மார்க்கெட் ராஜா மற்றும் ராஜபீமா என்றப் படங்களில் நடித்திருந்தார் ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவில் செல்லவில்லை. தொடர்ந்தும் தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சியில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமைஇரண்டாவது சீசனில் வெற்றிப் பெற்றவர் ரித்விகா. மேலும் பிக்பாஸ் வரலாற்றில் டைட்டிலை ஜெயித்த ஒரே பெண் போட்டியாளர் இவர் தான். இவரும் சில படங்களில் சில வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கும் தற்போது பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமைமூன்றாவது சீசனில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னரான முகின் ராவ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரின் ஆல்பம் பாடல் வெளியாகி இவரை பிரபலமாக்கியது. அதனைத் தொடர்ந்து வேலன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் அத்திரைப்படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. தற்போது MY3 என்கிற வெப்சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமைநான்காவது சீசன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் அனைவருக்கும் பிடித்தமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வந்தவர். பட வாய்ப்புக் குறைந்தவுடன் சைில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமைஐந்தாவது சீசன் வெற்றியாளர் ராஜு. சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியிலேயே ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அவர் தற்போது வரைக்கும் எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை.

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமைஆறாவது சீசனின் வெற்றியாளராக அசீம் வெற்றிப் பெற்றார். ஆனால் அதிக நெகட்டிவிட்டியான போட்டியாளராக இருந்தவரும் இவர்தான். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற பணத்தைக் கூட ஏழைப் பிள்ளைகளுக்கு கொடுத்து உதவினார். தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் பல வெளியாகியிருந்த நிலையில் அதிகார்ப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.      

LATEST News

Trending News

HOT GALLERIES