சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்த ராஷ்மிகா..!
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ராஷ்மிகா தொடர்ந்து பல இந்திய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, விஜய், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற படங்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், அடுத்ததாக அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திலிருந்து ராஷ்மிகாவின் First லுக் சமீபத்தில் தான் வெளிவந்தது. படங்கள் மட்டுமின்றி விளம்பரத்திலும் ஆர்வமாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலிவுட் கிங் கான் மற்றும் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானுடன் இணைந்து விளம்பர படத்தில் நடித்துள்ளார்.