நயன்தாரா அட்லீ மீது கோபத்தில் இருக்கிறாரா.. தீயாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி..!
அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து அதன் பின் இயக்குனராக களமிறங்கியவர். அவரது முதல் படமான ராஜா ராணி படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
அதன் பிறகு பிகில் படத்தில் அவர் அட்லீ உடன் பணியாற்றினார். மேலும் அட்லீ ஹிந்தியில் அறிமுகம் ஆன ஜவான் படத்திலும் நயன்தாராவை தான் ஹீரோயின் ஆக்கி இருந்தார்.
ஜவான் படத்தின் வசூல் தற்போது 1000 கோடியை நெருங்கி வருகிறது. அதனால் அட்லீ கெரியரில் உச்சகட்ட சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜவான் படத்தில் தனது ரோல் சரியாக இல்லை என நயன்தாரா அட்லீ மீது செம கோபத்தில் இருக்கிறார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது.
ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அவர் நேற்று அட்லீயின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாக்ராமில் வாழ்த்து கூறி இருக்கிறார். "Happy Birthday Atlee. So Proud of you" என நயன்தாரா குறிப்பிட்டு இருக்கிறார்.