த்ரிஷாவுக்கு திருமணமா.. லியோ ஸ்டைலில் அதிரடியாக கொடுத்த பதில்..!
நடிகை த்ரிஷா தற்போது படுபிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்து பல பெரிய படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.
தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதனால் அவரைப் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நடிகை திரிஷா கேரளாவை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுத்து த்ரிஷா தற்போது ஒரு பதிவை போட்டிருக்கிறார். "KEEP CALM AND STOP RUMOURING" என த்ரிஷா காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
லியோ பட போஸ்டரில் வந்த வாக்கியங்கள் போல த்ரிஷா இப்படி பதிவிட்டு இருக்கிறார்.