சின்னத்திரையில் நுழைந்த அப்பாஸ்.. அடுத்து பிக் பாஸ் ஷோவுக்கும் வருகிறாரா...
நடிகர் அப்பாஸ் 90களில் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் ரஜினியின் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில் பின்னர் வாய்ப்பு இல்லாததால் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அப்பாஸ் தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். பல்வேறு சேனல்களுக்கும் சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்து இருந்தார். மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாகும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அப்பாஸ் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார். அவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் கெஸ்ட் ஆக பங்கேற்று இருக்கிறார்.
அடுத்து அப்பாஸ் விஜய் டிவியில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் ஷோவிலும் கலந்துகொள்ள போகிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.