விஜயகுமார் மகள் வீட்டில் நடந்த விஷேசம்: இது குடும்பமா இல்ல பிக்பாஸ் வீடா... கலாய்க்கும் நெட்டிசன்கள்
நடிகர் விஜயகுமாரின் மகள்கள் மற்றும் மகனுடன் மொத்த குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் சினிமாவில் பல வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து பலரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டவர் தான்.
அக்னி நட்சத்திரம் என்றத் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகராக மாறினார் விஜயகுமார். இவர் சினிமாவில் கதாநாயகனாக, வில்லனாக பல முகங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகளும், இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா, அருண்விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் சினிமாவில் இருந்து தங்களுக்கு என ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து குடும்பம், பிள்ளைகள் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள்.
இந்நிலையில் இவர்கள் தற்போது மிகப் பெரிய குடும்பமாக இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது விஜயகுமாரின் மகளான அனிதா புது வீடு ஒன்றைக் கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தியிருக்கிறார்.
இந்த விஷேசத்தில் இவர்களின் மொத்த குடும்பமும் ஒன்றுகூடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் விஜயகுமாரின் குடும்பப் பெண்களை வைத்து ஒரு பிக்பாஸ் வீடே நடத்தலாம் என்று கமெண்ட செய்து வருகிறார்கள்.