சென்சேஷன் இயக்குனரின் இயக்கத்தில் 57 வயது நடிகருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா.. வில்லனாக களமிறங்கும் முன்னணி நட்சத்திரம்..!
சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. இதன்பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரு திரைப்படங்களும் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து ராஷ்மிகா தமிழ் ஹீரோவுடன் கைகோர்த்து நடிக்கவுள்ள படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2018 படம் மூலம் சென்சேஷன் இயக்குநராகி இருப்பவர் மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள பாண் இந்தியன் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.