திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் 3 நிறுவனம்.
தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய்.
ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அதிரடியாக விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஹாட்ஸ்டார் தளத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை மட்டும் விற்பனை செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.
விஜய் தொலைக்காட்சியை வாங்க இப்போது 3 நிறுவனங்கள் கடும் போட்டி போட்டு வருகிறார்கள். ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை வாங்க முன்வந்துள்ளார்கள்.
இந்த 3 நிறுவனங்களில் அதிக தொகை கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.